TAI Youtube Channel

பெயில் கேட்பவர்கள் பெயில் மனுவில் பொதுவாய் சொல்லப்படுகின்ற காரணங்கள்!

பெயிலில் செல்லாவிடில் தனது வேலையை இழக்க நேரிடும்.

தான் மட்டுமே குடும்பத்தில் சம்பாதிக்கும் நபர் என்பதால், தனது குடும்பம் பாதிக்கப்படுகிறது.

காவலில் இருப்பவருக்கு உடல்நலமில்லை, சிகிச்சை எடுப்பது வெளியில் தான் சாத்தியம்.

ஜாமீன் வழக்கும் சூழ்நிலைகள் ஜாமீன் கொடுப்பது என்பது சட்டத்தின் வழிமுறை. ஜாமீனை மறுப்பது என்பது ஒரு விதிவிலக்கே. அவ்வாறு ஜாமீன் கொடுப்பதற்கு காவல் துறையோ, நீதிமன்றமோ மறுக்கும் பட்சத்தில் அவ்வாறு மறுப்பதற்கான காரணத்தை பதிவு செய்ய வேண்டும். பொதுவாக, ஒரு வழக்கின் தன்மை, அதன் வீரியம், குற்றம் சாட்டப்பட்டவரின் எதிராக இருக்கும் சாட்சியம், குற்றவாளி சாட்சியத்தை அழிக்கக்கூடிய அல்லது கலைக்கக்கூடிய வாய்ப்பு, குற்றவாளியால் சமுதாய அமைப்புக்கு பங்கம் ஏற்படக்கூடிய ஒரு நிலை, குற்றவாளியின் சுதந்திரம், மேலும் குற்றம் புரிய வாய்ப்பாக அமைதல், இவற்றையெல்லாம் மனதில் இருத்தியே ஜாமீன் வழங்கப்படுகிறது.
scroll to top

You cannot copy content of this page

error: Content is protected !!