P. Pandian (Advocate)
தமிழக அறப்போர் இயக்கம்
Tamilaka Arappor Iyakkam (Tai)
(Govt. Regd. Anit – 76/4/2000)

அடிப்படையில் நான் ஒரு விளையாட்டு வீரன், மாநில அளவிலான Power lifting மற்றும் Body building சாம்பியன். இதற்கு முழுமையான காரணம் என் உடன் பிறந்த சகோதரர் திரு சங்கர். அவர் இந்தியா அளவிலும் உலக அளவிலும் Power lighting பல பதக்கங்களை வென்று தமிழகத்திற்கு பெருமையை பெற்று தந்தவர். அவரின் உந்துதல் என்னை விளையாட்டு துறைக்கு வர செய்தது. அதன் பிறகு சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்ட கல்லூரியில் சட்டம் படித்து,சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல் தொழில் செய்து வருகிறேன்.

ஆரம்பம் முதல் சமூக சேவையில் அதிக ஆர்வம்,அதன் காரணமாக அடிதட்டு மக்கள் சமூக,சட்ட விழிப்புணர்வு இல்லாமல், அரசு,அரசியல்வாதிகள், அதிகாரிகளிடம் படும் துன்பத்தை துளி அளவாது நாம் துடைக்கவேண்டும் என்ற என்னத்தில் அரசு சட்ட விதியின் படி 2000 ஆண்டு ஏப்ரல் மாதம் முறைப்படி தேசிய ஒருமைப்பாடு அறக்கட்டளை கீழ் தமிழக அறப்போர் இயக்கம் தொடங்கிது முதல் சட்ட விழிப்புணர்வு, சமூக விழிப்புணர்வு, அரசியல் விழிப்புணர்வு, அரசு நிர்வாக நடைமுறைகள் பற்றி விழிப்புணர்வு மற்றும் பல முகாம்கள் நடத்தி வருகிறேன்.

மேலும் பல வார,மாத இதழ்களில் சட்டம் அறிவோம் என்ற தலைப்பில் தொடர் கட்டுரைகளை எழுதி வருகிறேன். வலைத்தளங்களில் , தொலைபேசி வாயிலாகவும், நேரடியாகவும், இயற்கை சீற்றம் போதும் பல உதவிகள் செய்து வருகிறோம். எங்கள் முக்கிய குறிக்கோள் லஞ்சம்,ஊழல் எதிப்பு, சட்ட,அரசியல்,சமூக மற்றும் அரசு நிர்வாக விழிப்புணர்வு ஏற்ப்படுத்துவதே!

இன்று தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் கொண்ட இயக்கமாக உருவெடுத்தது உள்ளது, மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது!

P Pandian, B.A., B.L., PGDFM., PGDPT., Advocate