TAI Youtube Channel

குடும்ப உறவு சம்பந்தப்பட்ட வழக்குகளில் இடைக்கால ஜீவனாம்சம் கேட்க முடியுமா?

sandy-millar-KhStXRVhfog-unsplash.jpg

குடும்ப உறவு சம்பந்தப்பட்ட வழக்குகளில் தரப்பினர்கள் தங்கள் இஷ்டத்திற்கு இந்து திருமணச் சட்டம் பிரிவு 24 ன் கீழ் மனுதாக்கல் செய்து இடைக்கால ஜீவனாம்சம் கேட்க முடியுமா?

எந்த சூழ்நிலையில் இடைக்கால அரசு கேட்டு மனுத்தாக்கல் செய்யலாம்?

இடைக்கால ஜீவனாம்சம் கேட்டு இந்து திருமணச் சட்டம் பிரிவு 24 ன் கீழ் தாக்கல் செய்யப்படும் மனுக்களை தரப்பினர்கள் தாக்கல் செய்யும் சத்திய பிரமாண வாக்குமூலங்களை கொண்டு தான் நீதிமன்றங்கள் முடிவு செய்ய வேண்டும் என்பதை நீதிபதிகள் தங்கள் மனதில் கொள்ள வேண்டும். இந்து திருமணச் சட்டம் பிரிவு 24 ன் கீழ் உத்தரவிடுவது என்பது, இந்து திருமணச் சட்டம் பிரிவு 25 அல்லது இந்து மகவேற்பு மற்றும் வாழ்க்கை பொருளுதவிச் சட்டம் அல்லது குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 125 ன் கீழ் பிறப்பிக்கப்படும் உத்தரவுக்கு ஒப்பானதாகும். தரப்பினரில் ஒருவர் பணம் சம்பாதிக்க எந்த வகையான தடையும் இல்லாத நிலையில் மற்றொருவரை நம்பித்தான் வாழ்வதாக கூறி இந்து திருமணச் சட்டம் பிரிவு 24 ன் கீழ் வாழ்க்கை துணைவரிடமிருந்து இடைக்கால ஜீவனாம்சம் கேட்டு மனு ஒன்றை தாக்கல் செய்ய முடியாது.

வழக்கு செலவுகள் என்பதற்கு இந்து திருமணச் என்று 24 ல், வழக்கறிஞர் கட்டணம், முத்திரைத்தாள் அல்லது நீதிமன்ற கட்டணம், குமஸ்தா செலவு, எழுதுபொருள் செலவு மற்றும் சாட்சிகளுக்கு அழைப்பாணை அனுப்புவதற்கு ஆகும் செலவு ஆகியவை அடங்கும்.

ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் ” கோவிந்தசிங் Vs திருமதி. வித்யா (AIR-1999-Rajasthan-304)” என்ற வழக்கில், இந்து திருமணச் சட்டம் பிரிவு 24 ன் கீழ் இருதரப்பினரும் இடைக்காலமாக ஜீவனாம்சம் கேட்டு மனுத்தாக்கல் செய்யலாம். ஒரு தரப்பினருக்கு வருமானம் இல்லாத நிலையில் மற்றொரு தரப்பினர் ஜீவனாம்சம் தரக்கூடிய நிலையில் இருந்தால் அவரிடம் ஜீவனாம்சம் கேட்டு மனுத்தாக்கல் செய்யலாம். ஆனால் சம்பாதிக்கக்கூடிய தகுதியுடையவ கணவர் தான் சம்பாதிப்பதை வேண்டுமென்றே நிறுத்தி விட்டு தன் மனைவியின் சம்பாத்தியத்தை சாரந்திருக்கலாம் என்று அர்த்தம் கொள்ளக் கூடாது. Anglo Saxon சட்டவியலில் எந்தவொரு நபரும் தனக்குத்தானே வருமானம் இல்லாதவராக ஆக்கிக் கொள்ளக்கூடாது என்ற ஒரு முதுமொழி உள்ளது. அந்த முதுமொழியானது சம்பாதிக்கும் கணவர்களுக்கு பொருந்தும். ஒரு நபர் தனக்குத்தானே வருமானமில்லாதவராக மாற்றிக் கொண்டால் அவர் தன்னுடைய வாழ்க்கை துணைவரிடம் ஜீவனாம்சம் கோருவதற்பகு தகுதியற்றவர் ஆகிறார் என்று தீர்ப்பு கூறியுள்ளது.

கல்கத்தா உயர் நீதிமன்றம் ” ரெசேனா மித்ரா Vs B. srimathi santhana mithra (AIR-2004-Calcutta-61)” என்ற வழக்கில், வழக்கு செலவுத் தொகை அல்லது வழக்கு நிலுவையில் இருக்கும் போது இடைக்காலமாக ஜீவனாம்சத்தை நிர்ணயிப்பதற்கு நிலையான நெறிமுறைகள் எதுவும் கிடையாது. நீதிமன்றம் இருதரப்பினர்களின் தகுதியை அடிப்படையாக கொண்டு அவர்களுடைய தேவைகள், குழந்தை மற்றும் மனைவி ஆகியோர்களுக்கு ஏற்படும் தேவையான செலவுகளுக்கான தொகையை கொடுக்கும் சக்தி ஆகியவற்றை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும். இடைக்கால ஜீவனாம்சத்தை நிர்ணயிக்கும் பொழுது தற்கால வாழ்க்கை முறைக்கு ஆகும் செலவுகளை கணக்கில் எடுத்துக் கொண்டு நீதிமன்றம் நிர்ணயிக்க வேண்டும். நல்ல திடகாத்திரமாக இருக்கும் ஒருவர் தானாகவே தனது சம்பாத்தியத்தை நிறுத்திக் கொண்டு தனது துணையிடம் ஜீவனாம்சம் கேட்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தீர்ப்பு கூறியுள்ளது.

மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் ” யஸ்பால் சிங் தாக்கூர் Vs அஞ்சனா (AIR-2001-M.P-67)” என்ற வழக்கில், கணவரான மனுதாரர் அவராகவே ஓய்வான ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கு முடிவெடுத்துக் கொண்டு, பணம் சம்பாதிக்கும் திறமை இருந்தும் அதற்கான எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல் இருக்கும் ஒருவர் இந்து திருமணச் சட்டம் பிரிவு 24 ன் கீழ் மனுதாக்கல் செய்ய முடியாது, அப்படி மனுத்தாக்கல் செய்யலாம் என்கிற நிலை இருந்தால் அது அந்த சட்டப்பிரிவை ஏற்படுத்தியதற்கான நோக்கத்தை கெடுப்பதாக அமைந்துவிடும் என்று தீர்ப்பு கூறியுள்ளது.

நல்ல உடல் நலத்துடன் இருக்கும் ஒருவர் அவருடைய மனைவியை பராமரிக்க கடமைபட்டவராவார். எந்த சூழ்நிலையிலும் அவர் அந்த கடமையை விட்டு வெளியே வர முடியாது. அதே நேரத்தில் பிரிவு 24 ன் கீழ் உத்தரவிடும் போது நீதிமன்றம் தரப்பினர்களின் பொருளாதார வசதியை மட்டுமே தனது கவனத்தில் கொள்ள வேண்டும். தரப்பினர்களின் நடத்தை குறித்து நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டியதில்லை.

எனவே நல்ல உடல் நலத்துடனும், கல்வித் தகுதியோடும் ஏற்கனவே வேலையில் இருந்த ஒரு நபர், அந்த வேலையை விட்டு வெறுமனே வீட்டில் இருந்து கொண்டு தன்னுடைய வாழ்க்கை துணைவரிடம் இடைக்கால ஜீவனாம்சம் என்ற வழக்கில் பணத்தை பறிக்கக்கூடாது. இந்து திருமணச் சட்டம் பிரிவு 24 அதற்கு உதவி செய்யாது. வெறுமனே சோம்பேறியாக இருந்து ஒரு நபருக்கு சட்டம் எப்போதும் உதவிக்கு வராது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

scroll to top

You cannot copy content of this page

error: Content is protected !!