TAI Youtube Channel

அரசு அதிகாரிகள் பொது மக்களின் புகார் மனு மீது முறையான நடவடிக்கை குறிப்பிட்ட காலத்திற்க்குள் எடுக்கவேண்டும்!

pexels-pixabay-48148.jpg

தமிழ்நாடு அரசாணை நிலை எண் 73 / 2018 நாள் : 11 – 06-2018 இல் பொதுமக்களின் குறை தீர் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான நடைமுறைகள் – அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளது –

 தமிழ்நாடு அரசு அலுவலக நடைமுறை நூலில் அத்தியாயம் 22 இல் பத்தி 167 பிரிவு (ii) க்கு திருத்தம் செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மனுக்களை பெற்றுக் கொண்ட 3 தினங்களுக்குள் மனுவை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புதல் உடனடியாக அனுப்பப்பட வேண்டும் என்றும்

மனுவைப் பெற்றுக் கொண்ட 30 தினங்களுக்குள் குறை தீர்க்கப்பட வேண்டும் என்றும்

 மனுதார் அம மனு தொடர்பாக அலுவலகத்திற்கு நேரில் வந்து கேட்கும் போது அம்மனு மீது எடுக்கப்பட்டக நடவடிக்கை குறித்து தெரிவித்தல் வேண்டும் என்றும்

ஏதேனும் காரணங்களுக்காக மனுவை இறுதி செய்ய கூடுதல் கால அவகாசம் தேவை என்றால் அது குறித்து மனு தாருக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்றும்

மனுதாரின் கோரிக்கையை ஏற்க இயலாத நிகழ்வில் அதற்குரிய காரணத்துடன் கூடிய பதிவை சம்பந்தப்பட்ட மனு தாருக்கு 30 தினங்களுக்குள் தெரிவிக்கலாம் என்றும்

தமிழ்நாடு அரசு புதிய அரசாணையை இயற்றியுள்ளது.

scroll to top

You cannot copy content of this page

error: Content is protected !!