TAI Youtube Channel

ஊர்வலம் போராட்டம் ஏதாவது நடத்த வேண்டும் என்றால் யாரிடம் அனுமதி பெற வேண்டும்!!!

ஊர்வலம்-போராட்டம்-ஏதாவது-நடத்த-வேண்டும்-என்றால்-யாரிடம்-அனுமதி-பெற-வேண்டும்.jpg

*நீங்கள் ஏதாவது ஊர்வலம் அல்லது போராட்டம் நடத்த போகிறர்கள் என்றால் அதற்கு முன் காவல்துறையினரிடம் அனுமதி பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

5 நபர்களுக்கு மேல் ஒன்றாக கோஷங்கள்,வசங்களை காவல்துறை அனுமதி பெறாமல் எழுப்ப கூடாது,அப்படி எழுப்பினால் அது குற்றமாக கருதப்பட்டு தண்டனைக்குள்ளாவீர்கள்.

கவனிக்கப்பட வேண்டிய ஒன்று என்னவென்றால் ,நீங்கள் போராட்டம் நடத்தும் 6 மணி நேரத்திற்கு முன் காவல்துறையினரிடம் அனுமதி பெற மனு / விண்ணப்பம் அளிக்க வேண்டும்.

காவல் நிலையத்தில் உள்ள காவல் நிலைய பொறுப்பு அலுவலர் உங்கள் மனு / விண்ணப்பங்களை பரிசீலனை செய்வார்.

உங்கள் மனுவில்// விண்ணப்பத்தில் போராட்டம் நடத்துவதற்கான காரணம் ,போராட்டத்தில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை, அனுமதி பெறும் நபர்களின் அடையாள அட்டை நகல்,

போராட்டத்தில் எழுப்பப்படும் வசனங்கள், போராட்டத்தில் தூக்கி பிடிக்கும் போர்டு ,வசன போர்டுகள்,பிலக்ஸ் போர்டுகளில் உள்ள வசனங்கள்.

முக்கியமாக அரசிற்கு எதிராக வசனங்களை கொண்டு போர்டு அடிக்கக்கூடாது.

மேற்ப்படி போராட்டத்தில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கையை பொருத்து காவல் நிலைய பொறுப்பாளர் அனுமதி அளிப்பார் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் ,உங்கள் மனு / விண்ணப்பத்தை மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அல்லது காவல் கண்காணிப்பாளர்க்கு மாற்றி அனுப்பி வைப்பார்.

scroll to top

You cannot copy content of this page

error: Content is protected !!